E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூல சமர்ப்பணம்

பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவர் சார்பாக பாராளுமன்ற சபை முதல்வரால் பின்வரும் சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

(i) "ஒதுக்கீடு"

2009 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களை திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும், அந்நிதியாண்டின் போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாடுகளை செய்வதற்கும் அத்தகைய செயற்பாடுகளுக்கான செலவினத்திற்கு அந்நிதியாண்டின் போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குக் கிடைக்கத் கூடியதாகவுள்ள அல்லது அதனிடமுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணமாகக் கொடுப்பதை இயலச்செய்வதற்கும், திரட்டுநிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமான.

(ii) "பிராந்திய அபிவிருத்தி வங்கி"

1997 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க,பிராந்திய அபிவிருத்தி வங்கிச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட பிராந்திய அபிவிருத்தி வங்கிகளின் சொத்துக்கள், பொறுப்புக்கள், ஒப்பந்தங்கள், ஊழியர்களை உள்ளீர்த்து பிராந்திய அபிவிருத்தி வங்கியைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கும்.

(iii) "இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கி (திருத்தம்)"

1997 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கிச் சட்டத்தைத் திருத்துவதற்காக.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான பணிகள்

குறை நிரப்பும்தொகை - தலைப்பு 212 - நிகழ்ச்சித்திட்டம் - 2 : ( 441, 800,000 ) - கல்வி அமைச்சு

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
(இன்றைய தினத்திற்கான ஒழுங்குப் பத்திரத்தில் விடய இலக்கம் 1 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது)


ஒத்திவைப்புப் பிரேரணை

"நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை" பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கெளரவ ரவீ கருணாநாயக்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.


அதன் பின்னர், சபை 1620 க்கு 2008 ஒக்டோபர் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks