பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
B : அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான தொழில் திணைக்களத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை
(iii) 2020 ஆம் ஆண்டுக்கான நெடுஞ்சாலைகள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v) 2020 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(vii) 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கைகள்
(viii) 2020 ஆம் ஆண்டுக்கான வர்த்தகத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix) 2020 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திணைக்களத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை மற்றும் கணக்குகள்
(x) 2019 ஆம் ஆண்டுக்கான வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xi) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை
(xii) 2018/2019 ஆம் ஆண்டுக்கான களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை லிமிரெட்டின் ஆண்டறிக்கை
(xiii) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(xiv) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை
(xv) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 செப்தெம்பர் 29 ஆம் திகதிய 2247/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) நீதி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம். யூ. எம். அலி சப்ரி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ புத்திக பத்திறண - இரண்டு மனுக்கள் (ii) கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
நாட்டில் நெல், அரிசி மற்றும் உரப் பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அலகியவன்ன மற்றும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் பதிலளித்தனர்.
சிறப்புரிமைக் கேள்விகள்
(i) கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க
குற்றப் புலனாய்வுத் துறையினரால் தனது தொலைபேசி அழைப்புகளைத் ஒத்துக் கேட்டல்
(ii) கௌரவ சமிந்த விஜேசிறி
திரு. திருகுமார் நடேசனினால் தனக்கு விடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2020 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“ஒதுக்கீடு (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ சந்திம வீரக்கொடி அவர்களுக்கு “தஸ்ஸனா பௌத்த சன்விதானயவைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்
(iii) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்புப் பிரேரணை
“நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு உரங்கள் வழங்குவது தொடர்பான தற்போதுள்ள பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1803 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஒக்டோபர் 22ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks