பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A: பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் மற்றும் தெரிவுக் குழுவின் கூட்டங்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(ii) 2019 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(iii) 2020 ஆம் ஆண்டுக்கான திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபையின் வருடாந்த அறிக்கை
(v) 2020 ஆம் ஆண்டுக்கான கம்பனி தோட்டங்களை மறுசீரமைத்தல், தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை, தேயிலைத் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி மேம்பாடு இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 யூன் 30 ஆம் திகதிய 2234/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vii) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 யூன் 30 ஆம் திகதிய 2234/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 யூலை 02 ஆம் திகதிய 2234/49 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 யூலை 06 ஆம் திகதிய 2235/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (மேஜர்) பிரதீப் உந்துகொட
(ii) கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
கோவிட்-19 இன் எழுச்சி தொடர்பாக 2021.08.03 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு சுகாதார அமைச்சர் கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களைப் பார்க்க துறைமுக பொலிஸ் அனுமதி மறுப்பு
(ii) கௌரவ சாகர காரியவசம்
கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டின் போதான இலத்திரனியல் வாக்குப்பதிவின் முரண்பாடுகள்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
இலங்கைப் பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபையைத் தாபிப்பதற்காகவும்; ஆரம்பநிலை பெற்றோலியக் கைத்தொழில் மீதான தேசிய கொள்கையொன்றை உருவாக்குவதற்காகவும் இலங்கையிலுள்ள நவீன தேடிக்கண்டறிகை, அபிவிருத்தி, தயாரிப்பு மற்றும் முகாமைச் செயல்முறைகளினூடாக உள்நாட்டுப் பெற்றோலிய வளங்களின் அதிகபட்ச பொருளாதாரப் பெறுமானத்தைக் கவர்கின்ற கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவதற்காகவும் முகாமை செய்வதற்காகவும் ஏற்பாடுசெய்வதற்கும்; 2003 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க, பெற்றோலிய வளங்கள் சட்டத்தை நீக்குவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடுசெய்வதற்குமாக
“பெற்றோலிய வளங்கள்”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
(ii) குறைநிரப்புத் தொகை— செலவினத் தலைப்பு 441 - நிகழ்ச்சித்திட்டம் 01 மற்றும் 02
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ சமிந்த விஜேசிறி
(ii) கௌரவ குமாரசிறி ரத்னாயக்க
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“நிதி மோசடி விசாரணைப் பிரிவு காரணமாக பாதிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அதன் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1735 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஆகஸ்ட் 06ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks