பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A: கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன நேற்று சபா மண்டபத்தில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பானது
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான தொழில் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2019 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் வருடாந்த நிதிக் கூற்றுக்கள்
(iii) 2019 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகளும்
(iv) 2019 ஆம் ஆண்டுக்கான கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(v) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(vi) 2019 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(vii) 2019 ஆம் ஆண்டுக்கான சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டேமினல்ஸ் லிமிடட்டின் வருடாந்த அறிக்கை
(viii) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மின்சக்தி அமைச்சின் இலங்கை மின்சார சபை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2(3) ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2021 ஏப்ரல் 13 ஆம் திகதிய 2223/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2(3) ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2021 ஏப்ரல் 26 ஆம் திகதிய 2225/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xi) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2021 ஏப்ரல் 27 ஆம் திகதிய 2225/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2021 ஏப்ரல் 27 ஆம் திகதிய 2225/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2(3) ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2021 மே 17 ஆம் திகதிய 2228/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2(3) ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2021 யூன் 14 ஆம் திகதிய 2232/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xv) (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம்
(2021 ஏப்ரல் 22 ஆம் திகதிய 2224/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை )
(xvi) (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம்
(2021 மே 17 ஆம் திகதிய 2228/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களுக்கு பதிலாக கௌரவ உத்திக பிரேமரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சந்திம வீரக்கொடி
(ii) கௌரவ ஹெக்டர் அப்புஹாமி
(iii) கௌரவ அகில எல்லாவல
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாடுகள்
மேற்சொன்ன வினாவிற்கு கல்வி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
‘நிவ் போட்ரஸ் எனேர்ஜி கம்பனி’ க்கு கெரவலப்பிட்டி மின் உற்பத்தித் திட்டத்தினை வழங்கியுள்ளமை
மேற்சொன்ன வினாவிற்கு சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
மஹபொல புலமைப் பரிசில் நிதியச் சட்டம் தொடர்பான கூற்றொன்றினை வர்த்தக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ புத்திக பத்திறண அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது:-
(i) தென்னிலங்கை மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிப் பீடத்தைக் கூட்டிணைப்பதற்கானது
(ii) சமாதி தியான மற்றும் யோகாசன நிலையத்தைக் கூட்டிணைப்பதற்கானது
(iii) சமாதி சமூக அபிவிருத்தி மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானது
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம்
சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
(ii) கௌரவ சாந்த பண்டார
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“வீட்டுப் பணியாளர்களாக இளம்வயது சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எம். உதயகுமார் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1738 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஆகஸ்ட் 05ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks