பார்க்க

E   |   සි   |  

2021 ஜூலை 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’: அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

A.

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -

•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XV ஆம் பகுதியையும் ; மற்றும்
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXVI மற்றும் XXVI ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் XII ஆம் பகுதி மற்றும் ஆறாவது தொகுதியின் XX, XXI, XXII மற்றும் XXIII ஆம் பகுதிகள்

(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்காக கடன் நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்ட செயலாற்றல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் – II ஆம் பகுதி

B.

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -    

•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXII ஆம் பகுதியையும் ; மற்றும்
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIII ஆம் பகுதி மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XVI ஆம் பகுதி


(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -    

•    பொது நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள மரணச் சொத்துக்களின் முகாமைத்துவம் தொடர்பான மதிப்பீடு தொடர்பான கணக்காய்வு அறிக்கையின் – எட்டாவது தொகுதியின் III ஆம் பகுதியையும்; மற்றும்
•    2019 ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 2020 யூலை 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு கிடைத்திருந்த மக்கள் முறைப்பாடுகள் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பான கணக்காய்வு அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கைகள்
(ii)    2019 ஆம் ஆண்டுக்கான செலவினத் தலைப்பு இல. 04 - உயர் நீதிமன்றத்தின் (நீதியரசர்கள்) செயலாற்றுகை அறிக்கை
(iii)    2020 ஆம் ஆண்டுக்கான அலங்கார மீன், நன்னீர் மீன் மற்றும் இறால் செய்கை, கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பல்தின மீன்பிடி அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2017 ஆம் ஆண்டுக்கான பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(v)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் (SLIDA) ஆண்டறிக்கை
(vi)    2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை மரக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கைகள்
(vii)    2018 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சிச் சேவையின் ஆண்டறிக்கை
(viii)    2020 ஆம் ஆண்டுக்கான தபால் தலைமையகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ix)    2021 ஆம் ஆண்டுக்கான நிதி அமைச்சின் அரையாண்டு நிதி நிலைமை அறிக்கை
(x)    2020 ஆம் ஆண்டுக்கான பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xi)    2020 ஆம் ஆண்டுக்கான களஞ்சிய வசிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xii)    2017 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கை
(xiii)    2019 ஆம் ஆண்டுக்கான செலவினத் தலைப்பு இல. 234 - உயர் நீதிமன்ற பதிவாளர் திணைக்களத்தின்  செயலாற்றுகை அறிக்கை

(xiv)    2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021  ஏப்ரல் 19 ஆம் திகதிய 2224/2 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகை திருத்தப்பட்டு  2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021  யூலை 06 ஆம் திகதிய 2235/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xv)    2021 ஆம் ஆண்டின் குறைநிரப்பு மதிப்பீடு


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல      -   இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ அனுப பஸ்குவல்     

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ சமன்பிரிய ஹேரத் அவர்களுக்கு “மில்கோ பால் உற்பத்தியாளர்கள் மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

வலுசக்தி அமைச்சர் கௌரவ உதய கம்மன்பில அவர்கள் மீது நம்பிக்கையின்மை

விவாதிக்கப்பட்டதுடன், நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஜூலை 20ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks