பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’: “கொரோனா வைரஸ் தொற்று (கொவிட் – 19) (தற்காலிக ஏற்பாடுகள்)” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
‘B’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
(ii) 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபையின் ஆண்டறிக்கைகள்
(iii) 2019 ஆம் ஆண்டுக்கான மீயுயர் நீதிமன்றங்களின் கட்டிடத் தொகுதி முகாமை சபையின் வருடாந்த அறிக்கை
(iv) 2020 ஆம் ஆண்டுகளுக்கான கொம்ப்ரோலர் ஜெனரல் அலுவலகத்தின் நிதிச் செயலாற்றுகைக் கூற்று
(v) 2020 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii) 2020 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(viii) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ix) 2020 ஆம் ஆண்டுக்கான தகவல் தொழினுட்ப முகாமைத்துவத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(x) 2020 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி, கடலோரப் பாதுகாப்பு, கழிவுப்பொருள் வெளியேற்றம் மற்றும் தும்புரவு ஏற்பாட்டு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை.
(xi) 2020 ஆம் ஆண்டுக்கான நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xii) 2020 ஆம் ஆண்டுக்கான மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiii) 2020 ஆம் ஆண்டுக்கான அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(xiv) 2020 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xv) 2020 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2021.05.01 முதல் 2021.06.21 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xvi) 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் வெல்கம் ஹோட்டல்ஸ் லங்கா (பிறைவேட்) லிமிட்டெட் தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 மே 24 ஆம் திகதிய 2229/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvii) 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் எவிக் இன்டர்நெஷனல் ஹொட்டேல்ஸ் லங்கா லிமிட்டெட் தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 மே 24 ஆம் திகதிய 2229/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம். யூ. எம். அலி சப்ரி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க
(ii) கௌரவ விஜித ஹேரத் - நான்கு மனுக்கள்
(iii) கௌரவ அமரகீர்த்தி அதுகோரள
(iv) கௌரவ வசந்த யாப்பாபண்டார
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
நாட்டில் உர பிரச்சினைகள் தொடர்பான கூற்றொன்றினை கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்கள் முன்வைத்தார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
இலங்கையில் இணையவழி கல்வி முறைமை
மேற்சொன்ன வினாவிற்கு கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணைகள்
களுத்துறை தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்த சமரசிங்ஹ அவர்கள் 2021.06.22 முதல் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காதிருப்பதற்கு கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டது.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ மதுர விதானகே அவர்களுக்கு “இலங்கை மருந்தியல் சங்கத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்
(ii) சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம்
(iii) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை திருத்தம் செய்தல்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ இசுரு தொடன்கொட
(ii) கௌரவ கபீர் ஹஷீம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒழுக்கம் மற்றும் நடத்தை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மதுர விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1745 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஜூலை 07ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks