பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
கெளரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சனாதிபதியின் அறிவித்தல்கள்
A: பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான பிரகடனம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான அரச நிதித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுகளுக்கான அரசாங்க விலைமதிப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2020 ஆம் ஆண்டுக்கான அரசிறைக் கொள்கைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான அரச கணக்குகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v) 2020 ஆம் ஆண்டுக்கான திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi) 2019 ஆம் ஆண்டுக்கான துறைமுகை அதிகார சபையின் ஆண்டறிக்கை
(vii) 2019 யூன் 03 ஆந் திகதிய 2126/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட குடிவருவோர், குடியகல்வோர் ஒழுங்குவிதிகளை ஒழிப்பதற்காக (351 அத்தியாயமான) குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின், 23 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 52 ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சரால் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 மே 06 ஆம் திகதிய 2226/48 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ix) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின், 14 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரின் உடன்பாட்டுடன் வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 மார்ச் 15 ஆந் திகதிய 2219/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(x) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின், 14 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரின் உடன்பாட்டுடன் வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 மார்ச் 17 ஆந் திகதிய 2219/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xi) 1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவு 14(1)(ஊ) மற்றும் 15 ஆம் பிரிவுடன் உடன் வாசிக்க வேண்டிய, 53 ஆம் பிரிவின் கீழ் இரத்தினக்கல் மற்றும் ஆபரண உரிமக் கட்டணம் தொடர்பில் கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 மார்ச் 02 ஆம் திகதிய 2165/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையின் அச்சுப் பிழைகள் திருத்தப்பட்டு, 1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபைச் சட்டத்தின் பிரிவு 53 இன் கீழ் கைத்தொழில் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2021 ஏப்ரல் 01 ஆம் திகதிய 2221/49 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக குழுவின் உறுப்பினர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி
(ii) கௌரவ பிரசன்ன ரணதுங்க - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ லஸந்த அழகியவன்ன - நான்கு மனுக்கள்
(iv) கௌரவ எம்.எஸ். தௌபீக்
(v) கௌரவ இஷாக் ரஹுமான்
(மனுக்கள் பொது மனுக்கள் பற்றிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
அமைச்சார் கூற்றுக்கள்
இலங்கையில் காணப்படும் கோவிட் தொற்றுநோய் தொடர்பாக கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் பாராமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் 2021.05.18 அன்று கேட்கப்பட்ட வினாவிற்கு சுகாதார அமைச்சர் கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ எம்.ஏ. சுமந்திரன்
தமிழ் மொழியில் அறிக்கைகளை சமர்ப்பித்தல்
தனியார் சட்டமூலங்கள் சமர்ப்பித்தல்
(i) கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களுக்கு பின்வரும் சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
“சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306ஏ – தேசிய அபிவிருத்தி மன்ற நம்பிக்க நிதியம் (கூட்டிணைத்தல்) (திருத்தம்)”
(ii) கௌரவ புத்திக பதிரண அவர்களுக்கு பின்வரும் சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
“இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமையைக் (கூட்டிணைத்தல்)”
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பின்வரும் விடயங்கள் (இன்றைய தின ஒழுங்குப் பத்திரத்தின் விடய இல. 1 முதல் 6 வரை) சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.
(i) உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரண்டு ஒழுங்குவிதிகள்
(iii) குறைநிரப்புத் தொகை – தலைப்பு 240 – நிகழ்ச்சித்திட்டம் 02
(iv) அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ் இரண்டு பிரகடனங்கள்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் இரு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன்
(ii) கௌரவ முஜிபுர் ரஹுமான்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இரசாயண உர இடைநிறுத்தம் காரணமாக தேயிலைத் தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ வருண லியனகே அவர்களினால் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1753 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஜூலை 06ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks