பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A: அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
B: உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி கிடைக்கப்பெறல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான நிதி அமைச்சின் வருடாந்த அறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(iii) 2020 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2021.04.01 முதல் 2021.04.30 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(iv) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2021 யூன் 17 ஆம் திகதிய 2232/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(v) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2021 யூன் 18 ஆம் திகதிய 2232/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பித்தல்
காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எஸ். எம். சந்திரசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பிரேமலால் ஜயசேக்கர
(ii) கௌரவ புத்திக பத்திறண
(iii) கௌரவ எஸ்.எம். மரிக்கார் - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொது மனுக்கள் பற்றிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திஸாநாயக்க
புதிய லிட்ரோ எரிவாயு நிரப்பி தொடர்பானது
மேற்சொன்ன வினாவிற்கு வர்த்தக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சார் கூற்றுக்கள்
சில தாமதங்கள் காரணமாக பிணை பெற இயலாமை காரணமாக நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் விடுதலை தொடர்பாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் கூற்றொன்றனை முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பின்வரும் விடயங்கள் (இன்றைய தின ஒழுங்குப் பத்திரத்தின் விடய இல. 1 மற்றும் 2 வரை) சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.
(i) இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) காணி எடுத்தற் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் இரு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ சாணக்கியன் ராசபுத்திரன் ராசமாணிக்கம்
(ii) கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“நிகழ்நிலை கல்விக்கான பொருத்தமான முறைமை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன அவர்களினால் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1735 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஜூன் 23ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks