பார்க்க

E   |   සි   |  

2021 மே 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XVIII, XIX, XX, XXI மற்றும் XXII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் X மற்றும் XI  ஆம் பகுதிகளையும், ஒன்பதாவது தொகுதியின் XI, XII, XIII, XIV மற்றும் XV  ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(ii)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா ஹோட்டல் மற்றும் முகாமைத்துவ நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை

(iii)    அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுற்றாடல் அமைச்சின் மத்திய சுற்றாடல் அதிகாரசபை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 120(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பதிலாக கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ அனுப பஸ்குவல்            -    இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணைகள்

(i)    திருகோணமலை தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் 2021.05.18 முதல் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காதிருப்பதற்கு கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டது.

(ii)    நுவரெலியா தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்கள் 2021.05.18 முதல் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காதிருப்பதற்கு கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டது.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசாரணை நடைமுறை தொடர்பான கூற்றொன்றினை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர அவர்கள் முன்வைத்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ மயந்த திசாநாயக்க அவர்களுக்கு “இலங்கை காப்புறுதி நிறுவகத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

விவாதிக்கப்பட்டதுடன், நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 மே 20ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks