பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’: “கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
‘B’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XIII ஆம் பகுதியையும் ;
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XV ஆம் பகுதியையும் ;
• 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXVIII ஆம் பகுதியையும்; மற்றும்
• 2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXIII ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் XXIII மற்றும் XXIV ஆம் பகுதிகள்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் —
• பத்தாவது தொகுதியின் II ஆம் பகுதியின் அக்ரஹார காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை; மற்றும்
• 2018 ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 2019 யூலை 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு கிடைத்திருந்த மக்கள் முறைப்பாடுகள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலைமை தொடர்பிலான அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை.
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழத்தின் வருடாந்த அறிக்கையும் நிதிக்கூற்றுக்களும்
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான தேசக்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(v) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1), 6 மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஏப்ரல் 06 ஆம் திகதிய 2222/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் கற்கைகள் துறையை நிறுவுவது தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 மார்ச் 22 ஆம் திகதிய 2220/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(vii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 22 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் நிதி மற்றும் கணக்கியல் துறை, ஆங்கில மொழிக் கற்பித்தல் துறை, கருத்திட்ட முகாமைத்துவ துறை, மனிதவள முகாமைத்துவ துறை, சந்தைப்படுத்தல் முகாமைத்துவ துறை, வியாபாரப் பொருளியல் துறை மற்றும் முகாமைத்துவ மற்றும் தொழில் முயற்சியாண்மைத் துறை ஆகியவற்றை நிறுவுவது தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 மார்ச் 22 ஆம் திகதிய 2220/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ காமினி லொக்குகே - ஆறு மனுக்கள்
(ii) கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன
(iii) கௌரவ சீ.பீ. ரத்நாயக்க - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ வாசுதேவ நாணாயக்கார
(v) கௌரவ தயாசிறி ஜயசேக்கர - இரண்டு மனுக்கள்
(vi) கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே
(vii) கௌரவ ஜயந்த சமரவீர - மூன்று மனுக்கள்
(viii) கௌரவ விஜித ஹேரத் - நான்கு மனுக்கள்
(ix) கௌரவ புத்திக பத்திறண - இரண்டு மனுக்கள்
(x) கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய
(xi) கௌரவ நலின் பிரனாந்து
(xii) கௌரவ ரோஹண பண்டார
(xiii) கௌரவ வசந்த யாப்பாபண்டார
(xiv) கௌரவ பீ.வை.ஜீ. ரத்னசேக்கர
(xv) கௌரவ குமாரசிறி ரத்னாயக்க
(xvi) கௌரவ சமன்பிரிய ஹேரத்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
இலங்கையில் கோவிட் தொற்றுநோய்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) கோவிட் தொற்றுநோய்க்கான அரச செலவினம் தொடர்பான கூற்றொன்றினை நிதி அமைச்சர் சார்பாக நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் முன்வைத்தார்.
(ii) டவுடே சூறாவளி பேரழிவுக்கான நிவாரண சேவைகள் தொடர்பான கூற்றொன்றினை நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 15 வரையான விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) நிதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) நிதிச் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்
(iii) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கட்டளை சட்டத்தின் கீழ் கட்டளை
(v) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் எட்டு கட்டளைகள்
(vi) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்
(vii) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ குமாரசிறி ரத்னாயக்க
(ii) கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“இலங்கையில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 மே 19ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks