பார்க்க

E   |   සි   |  

2021 மே 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’: தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் சேவையாற்றுவதற்கான உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கைகள்
(ii)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர        -    இரண்டு மனுக்கள்                    
(ii)    கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
(iii)    கௌரவ லலித் எல்லாவல
(iv)    கௌரவ மிலான் ஜயதிலக்க
(v)    கௌரவ உத்திக பிரேமரத்ன
(vi)    கௌரவ குமாரசிறி ரத்னாயக்க
(vii)    கௌரவ காமினி வலேபொட
(viii)    கௌரவ வீரசுமன வீரசிங்ஹ

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிலையாக்கல் தொடர்பான கூற்றொன்றினை வர்த்தக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தைத் திருத்துவதற்காக

“நிதி முகாமைத்துவ (பொறுப்பு) (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


ஒத்திவைப்புப் பிரேரணை

“நாட்டின் தற்போதைய நிலைமை” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டது.


அதனையடுத்து, 1630 மணியளவில் பாராளுமன்றமானது 2021 மே 18ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks