பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’: “இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
‘B’ : அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கான உறுப்பினர்
‘C’ : பாராளுமன்றத்தில் கோவிட் - 19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றல் தொடர்பானது
‘D’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(iii) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய நீரியல் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(iv) 2017 ஆம் ஆண்டுக்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(v) 2020 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2021.03.01 முதல் 2021.03.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(vi) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 10(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்கத் தீர்வை மீதான மேலதிக கட்டண அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 பெப்ரவரி 01 ஆம் திகதிய 2213/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2020 நவம்பர் 17 ஆந் திகதிய 2202/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2020 நவம்பர் 21 ஆந் திகதிய 2202/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2020 திசெம்பர் 14 ஆந் திகதிய 2206/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2020 திசெம்பர் 16 ஆந் திகதிய 2206/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2021 சனவரி 13 ஆந் திகதிய 2210/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2021 சனவரி 18 ஆந் திகதிய 2211/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2021 பெப்ரவரி 11 ஆந் திகதிய 2214/58 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2021 மார்ச் 03 ஆந் திகதிய 2217/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xv) 2006 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 8 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 6(2) ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 பெப்ரவரி 09 ஆம் திகதிய 2214/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvi) திருத்தப்படடவாறான 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் சிலோன் டயர் மெனுபக்ஷரிங் கம்பெனி (பிறைவேட் லிமிட்டெட்) தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 மார்ச் 05 ஆம் திகதிய 2217/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvii) திருத்தப்படடவாறான 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் கொழும்பு சர்வதேச நிதிசார் நிலைய (CIFC) கலப்பு அபிவிருத்தி கருத்திட்டம் தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 மார்ச் 23 ஆம் திகதிய 2220/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xviii) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஏப்பிறல் 07 ஆம் திகதிய 2222/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xix) சர்வதேச தொழில் தாபனத்தினால் அதன் 2017 ஆம் ஆண்டுக்கான 106 வது அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதப்புரை
(xx) சர்வதேச தொழில் தாபனத்தினால் அதன் 2019 ஆம் ஆண்டுக்கான 108 வது அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதப்புரை
(xxi) சர்வதேச தொழில் தாபனத்தினால் அதன் 2019 ஆம் ஆண்டுக்கான 108 வது அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமவாயம்
(xxii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1) ஆம் பிரிவின் கீழ் கல்வி அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை றுகுணு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் கீழ் முகாமைத்துவம் மற்றும் முயற்சியாளர் நலனியல், சந்தைப்படுத்தல், மனிதவள முகாமைத்துவம், வியாபார முகாமைத்துவம், கணக்கியல் மற்றும் நிதி ஆகிய துறைகளை தாபித்தல் தொடர்பில் ஆக்கப்பட்டு, 2021 மார்ச் 03 ஆம் திகதிய 2217/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxiii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1) ஆம் பிரிவின் கீழ் கல்வி அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைகள் மற்றும் கலாசாரப் பீடத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறையினை தாபிப்பது தொடர்பில் ஆக்கப்பட்டு, 2021 மார்ச் 03 ஆம் திகதிய 2217/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ மஹிந்த அமரவீர
(ii) கௌரவ எஸ்.எம். சந்திரசேன
(iii) கௌரவ எஸ். பீ. திசாநாயக்க
(iv) கௌரவ புத்திக பத்திறண - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ சாந்த பண்டார
(vi) கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன - இரண்டு மனுக்கள்
(vii) கௌரவ (மேஜர்) பிரதீப் உந்துகொட
(viii) கௌரவ அனுப பஸ்குவல்
(ix) கௌரவ வசந்த யாப்பாபண்டார - இரண்டு மனுக்கள்
(x) கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
பசுமைப் பொருளாதாரம் குறித்த அமைச்சரவை பத்திரம் தொடர்பான கூற்றொன்றினை சுற்றாடல் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நான்கு அறிவித்தல்கள்
(iii) சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iv) உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
ஒத்திவைப்புப் பிரேரணை
“நாட்டின் தற்போதைய நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 மே 05ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks