E   |   සි   |  

2021 ஏப்ரல் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட அறிக்கையின் எட்டாவது தொகுதியின் XVII ஆம் பகுதியின் இலங்கையில் விசேட தேவையுடையவர்களை சமூகத்தில் வலுவூட்டுதல் தொடர்பான தேசிய செயலகத்தின் கடமைகளை மதிப்பாய்வு செய்தல் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    பெருந்தோட்ட அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய            -    இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ ஜயரத்ன ஹேரத்                                       
(iii)    கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன    -    மூன்று மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

கோவிட்-19 இனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்

மேற்சொன்ன வினாவிற்கு சுகாதார அமைச்சர் கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-

(i)    கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி
(ii)    கௌரவ மனுஷ நாணாயக்கார


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு கெம்பஸ்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1737 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஏப்ரல் 22ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks