பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’, ‘B’: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(iv) 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை ஆயுள்வேத மருத்துகள் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகள்
(v) 2018 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் வருடாந்த அறிக்கை
(vi) 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான ஆயுள்வேத வைத்திய சபையின் வருடாந்த அறிக்கைகள்
(vii) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேயிலைச் சபையின் வருடாந்த அறிக்கை
(viii) 2018 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) கம்பனியின் வருடாந்த அறிக்கை.
(ix) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை இணக்கப்பாட்டுப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை
(x) 2019 ஆம் ஆண்டுக்கான சட்டமா அதிபதி திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சந்திம வீரக்கொடி
(ii) கௌரவ உத்திக பிரேமரத்ன
(iii) கௌரவ மனுஷ நாணாயக்கார - நான்கு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
நுண்நிதிய கம்பனிகளை ஒழுங்குபடுத்தல்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 8 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) அந்நியச் செலவாணிச் சட்டத்தின் கீழ் ஐந்து ஒழுங்குவிதிகள்
(ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு அறிவித்தல்கள்
(iii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ சாந்த பண்டார
(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“ஸ்ரீ ஜயவர்தனபுர தலைநகரின் நகர்ப்புற எல்லைகளை நிர்ணயித்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மதுர விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஏப்ரல் 21ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks