பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’: கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ. அவர்களின் ஆசனம் வெற்றிடமாகுதல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXII, XXIII மற்றும் XXIV ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் IX, X மற்றும் XI ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின் VII மற்றும் VIII ஆம் பகுதிகள்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியினது I ஆம் பகுதியின் உணவு ஆணையாளர் திணைக்களத்தினால் பாதுகாப்பான அரிசித் தொகையினைப் பராமரித்தல் மற்றும் சேமிப்புப் பயன்பாட்டின் செயல்திறன் தொடர்பிலான அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி நிதியம் பற்றிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை
(ii) 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 34 ஆம் பிரிவின் கீழ் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2021 பெப்ரவரி 23 ஆம் திகதிய 2216/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ டீ. பி. ஹேரத்
(ii) கௌரவ கயந்த கருணாதிலக்க
(iii) கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
கோவிட் -19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி திட்டம்
மேற்சொன்ன வினாவிற்கு சுகாதார அமைச்சர் கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்கள் பதிலளித்தார்.
தனிப்பட்ட விளக்கங்கள்
தென்னை, கித்துல் மற்றும் பனை செய்கைகள் மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கௌரவ அருந்திக்க பர்னாந்து அவர்கள் வெண்ணப்புவ உதவி காவல்துறைக் கண்காணிப்பாளரின் இடமாற்றம் தொடர்பாக தனிப்பட்ட விளக்கமொன்றினை வழங்கினார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ திலிப் வெதஆரச்சி
கௌரவ ரஞ்சன் ராமநாயக்க அவர்களை சிறையில் பார்க்க அனுமதித்தல்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கௌரவ பாராளுமன்ற சபை முதவர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i) கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு - விசேட பொருளாதார வலயமொன்றின் தாபிப்புக்கென ஏற்பாடு செய்வதற்கும்; பதிவுசெய்தல்கள், உரிமங்கள், அதிகாரவளிப்புகள், மற்றும் வேறு அங்கீகாரங்களை அளிப்பதற்கும் அத்தகைய வலயத்திலும் வலயத்திலிருந்தும் வியாபாரங்களையும் வேறு செயற்பாடுகளையும் கொண்டு நடாத்துவதற்கும் தத்துவமளிக்கப்பட்ட ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய வலயத்தினுள் செய்கின்ற வியாபாரத்தின் எளிதாக்கலின் மேம்படுத்துகைக்கான ஒற்றைச் சாளர முதலீட்டு வசதிப்படுத்துநரொருவரின் அடையாளப்படுத்துகைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய வலயத்தினுள் செயல்நுணுக்க முக்கியத்துவமான வியாபாரங்களின் மேம்படுத்துகைக்கான ஊக்குவிப்புகள் மற்றும் வேறு விலக்களிப்புகளைத் தீர்மானிப்பதற்கும் அளிப்பதற்கும்; அத்தகைய வலயத்தினுள் அரசாங்க சந்தைப்படுத்தப்படற்பாலதான காணி மற்றும் கருத்திட்டக் கம்பெனி சந்தைப்படுத்தப்படற்பாலதான காணி மற்றும் வளவுகளினதும் மற்றும் அதிலுள்ள கூட்டாட்சியாதனச் சிறுகூறுகளினதும் ஏற்பாடு செய்யப்பட்டவாறான கொடுக்கல் வாங்கல்களைச் செய்துகொள்வதற்கும்; அத்தகைய வலயத்தினுள் சர்வதேச வர்த்தகம், கப்பற்றொழில் முகாமைத்துவ தொழிற்பாடுகள், கரைகடந்த வங்கித்தொழில் மற்றும் நிதிசார் சேவைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபார வழிமுறை, வெளியாட்களை பணிக்கமர்த்தல் முறை, கூட்டிணைக்கப்பட்ட தலைமையகங்களின் தொழிற்பாடுகள், பிராந்திய விநியோகத் தொழிற்பாடுகள், சுற்றுலாப் பயணத்துறை மற்றும் வேறு துணையாய சேவைகளை மேம்படுத்துவதற்கும் வசதிப்படுத்துவதற்கும்; அத்தகைய வலயத்தினுள் சர்வதேச பிணக்குத்தீர்வு நிலையமொன்றை தாபிப்பதற்கும்; நகர வசதி தொழிற்பாடுகள் மற்றும் அத்தகைய வலயத்தினுள் வதிவிட சமூகமொன்றின் குடியேற்றங்களை மேம்படுத்துவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்கானது
(ii) இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் (திருத்தம்) - இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் (திருத்தம்),— 1968 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
ஒத்திவைப்புப் பிரேரணை
“2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாகப் புலனாய்வு செய்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் அல்லது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டது.
அதனையடுத்து, 1630 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஏப்ரல் 09ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks