பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான டவர் மண்டப அரங்க மன்றத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக் கூற்றுக்கள்
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) சரித்த ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர
(ii) கௌரவ நிமல் லான்சா - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ விஜித பேருகொட
(iv) கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா
(v) கௌரவ திலிப் வெதஆரச்சி
(vi) கௌரவ சாந்த பண்டார
(vii) கௌரவ வருண லியனகே
(viii) கௌரவ சாமர சம்பத் தசனாயக
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் உள்ளடங்கியுள்ள நச்சுத்தன்மை
மேற்சொன்ன வினாவிற்கு வர்த்தக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
தரையோடுகள் மற்றும் குளியளறைப் பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்தல் தொடர்பாக 2021.03.24 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி அமைச்சர் சார்பாக நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் பதிலளித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ அசோக்க பிரியந்த அவர்களுக்கு “தெதிகம ஸ்ரீ மைத்திரீ பிரக்ஞார்த்த பௌத்த கல்வி தஹம் சபாவவைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்
(ii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்
(iii) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் திருத்துவதற்கான தீர்மானம்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ பீ.வை.ஜீ. ரத்னசேக்கர
(ii) கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பணவீக்கம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஏப்ரல் 07ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks