E   |   සි   |  

சபை அலுவல்கள்


(i) வாரியபொல ரஜமகா விஹாரை அபிவிருத்திச் சங்கத்தைக் கூட்டிணைப்பதற்கான ஒரு சட்டமூலம்

(ii) செந்தாமரை (சர்வதேச) இலங்கை அமைப்பைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்


எனும் தலைப்புக்களிலான சட்டமூலங்களைச் சபையில் சமர்ப்பிக்க கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

பின்வரும் விடயங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன:-

(i) பாடசாலை ஆசிரியர் ஓய்வுதிய(திருத்தச்) சட்டமூலம்

(ii) குறைநிரப்பும் தொகை தலைப்பு 118 நிகழ்ச்சித்திட்டம் 2:
(ரூபா 11854000000)

(iii) மகாவலி கலாசார மன்ற நம்பிக்கைப்பொறுப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.

(iv) றங்கா கலை நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(v) பொலன்னாவ பௌத்த இளைஞர் கழகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு



ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணை

"சனாதிபதி நிதியத்தின் நோக்கங்கள்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எட்வேட் குணசேகர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


இதனையடுத்து பி. ப. 4.00 மணியளவில் பாராளுமன்றமானது 2008 ஓகத்து 08ஆந் திகதி வெள்ளிக்கிழமை மு. ப. 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks