E   |   සි   |  

2021 மார்ச் 26ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’: இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன் தெரிகுழுவில் சேவையாற்றுவதற்கான  உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின்  வருடாந்த  அறிக்கை

(ii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ் கல்வி அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானத்துறையை நிறுவுவது தொடர்பில்  ஆக்கப்பட்டு, 2020 திசெம்பர் 18 ஆம் திகதிய 2206/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்   ஸ்ரீலங்கா இன்டநஷனல் புடிஸ்ட் அகடமியை வியாபார முகாமைத்துவத்தில் கௌரவ இளமாணி  மற்றும் கண்டிய நடனத்தில் கௌரவ அரங்கேற்றல் கலை இளமாணி ஆகிய பட்டங்களையளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து  கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2021 ஜனவரி 13 ஆம் திகதிய 2210/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்   எஸ். எல். ரி. கம்பஸ் (பிறைவெட்) லிமிட்டெட்டை தரவு விஞ்ஞானத்தில் கௌரவ விஞ்ஞான இளமாணி, கிளவுட் கம்பியுடிங் கௌரவ விஞ்ஞான இளைமாணி, மென்பொருள் பொறியியலில் கௌரவ விஞ்ஞான இளமாணி, இணையப் பாதுகாப்பில் கௌரவ விஞ்ஞான இளமாணி, சிவில் பொறியியலில் கௌரவ பொறியியல் விஞ்ஞான இளமாணி மற்றும் இசையில் கெளரவ இளமாணி ஆகிய பட்டங்களையளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து  கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2021 ஜனவரி 13 ஆம் திகதிய 2210/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்   சேஜஸ் கம்பஸ் பிறைவெட் லிமிட்டெட்டை மனிதவள முகாமைத்துவத்தில் கௌரவ வியாபார முகாமைத்துவ இளமாணி, வியாபார முகாமைத்துவ கௌரவ இளமாணி, கணக்கியல் மற்றும் நிதியியலில் கௌரவ வியாபார முகாமைத்துவ இளமாணி மற்றும் சந்தைப்படுத்தலில் கௌரவ வியாபார முகாமைத்துவ இளமாணி ஆகிய பட்டங்களையளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து  கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2021 ஜனவரி 22 ஆம் திகதிய 2211/69 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்   சினக் கெம்பஸ் (பிறைவெட்) லிமிட்டெட்டை வியாபார நிருவாக முதுமாணி மற்றும் எந்திர மின்னணுவியல் பொறியியலில் கௌரவ விஞ்ஞான பொறியியல் இளமாணி ஆகிய பட்டங்களையளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து  கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2021 பெப்ரவரி 08 ஆம் திகதிய 2214/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ அமரகீர்த்தி அதுகோரள                   
(ii)    கௌரவ அசங்க நவரத்ன            -    இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோயியல் பதார்த்தம் தொடர்பான கூற்றொன்றினை வர்த்தக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ பாராளுமன்ற சபை முதவர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-

(i)    ஜெனரல் சோ் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் - ஜெனரல் சோ் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் என அறியப்படும் பல்கலைக்கழகமொன்றைத் தாபிப்பதற்கும், பேணுவதற்கும், நிருவகிப்பதற்கும் ஏற்பாடு செய்வதற்கும்; பல்கலைக்கழக மட்டத்தில் உயர்கல்வியைப் புகட்டுவதற்கும்; கந்தவளை தோட்டத்தையும் அதன் மீதுள்ள அசையும் ஆதனத்தையும் பல்கலைக்கழகத்திற்கு உரித்தாக்குவதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; 1981 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க, சோ் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டத்தை நீக்குவதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்கானது
(ii)    உண்ணாட்டரசிறை (திருத்தம்) - 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iii)    சோ்பெறுமதி வரி (திருத்தம்) - 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சோ்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானது


ஒத்திவைப்புப் பிரேரணை

“2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாகப் புலனாய்வு செய்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் அல்லது  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டது.


அதனையடுத்து, 1630 மணியளவில் பாராளுமன்றமானது 2021 பெப்ரவரி 26ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks