E   |   සි   |  

2021 மார்ச் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சமர்ப்பிக்கப்பட்ட பத்திரங்களின் அச்சுப் பிரதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்கர், காலஞ்சென்ற (வண.) கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரரின் மறைவு தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானம் பற்றிய கூற்றொன்றினை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.

(ii)    புலம் பெயர் இலங்கை தொழிலாளர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டம் தொடர்பாக 2021.03.10 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாக்களிற்கு கல்வி அமைச்சர் சார்பாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ பியல் நிசாந்த த சில்வா அவர்கள் பதிலளித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண அவர்களுக்கு “இதயத்துடன் இதய நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாகப் புலனாய்வு செய்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் அல்லது  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டது.


அதனையடுத்து, 1630 மணியளவில் பாராளுமன்றமானது 2021 பெப்ரவரி 26ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks