பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தம் உள்ளடக்கப்பட்ட அரசியலமைப்பின் திருத்திய பதிப்பின் அச்சுப் பிரதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் வருடாந்த அறிக்கை
(v) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 135(4) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2019 ஒக்டோபர் 09 ஆம் திகதிய 2144/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி
(vi) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 143 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 237 ஆம் பிரிவின் கீழ் தொடர்பில் போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2020 சனவரி 30 ஆம் திகதிய 2160/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) சரித்த ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்
(ii) கௌரவ மதுர விதானகே
(iii) கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
முன்பள்ளி பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள், வசதிகள் போன்றன
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விசாரணை தொடர்பான கூற்றொன்றினை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர அவர்கள் கூற்றொன்றினை முன்வைத்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ புத்திக பத்திறண அவர்களுக்கு ““மாத்தறைப் பருவம்” அமைப்பினைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ் தீர்மானம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாகப் புலனாய்வு செய்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் அல்லது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (சனாதிபதி சட்டத்தரணி) ஜயந்த வீரசிங்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 மார்ச் 23ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks