E   |   සි   |  

2021 மார்ச் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பணம்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XVII, XVIII, XIX, XX மற்றும் XXI ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் VIII ஆம் பகுதியையும், ஆறாவது தொகுதியின் XVII, XVIII மற்றும் XIX  ஆம் பகுதிகள்

(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் ─
•    அனுமதி பெற்ற மதுபான உற்பத்திச் சாலைகள் தொடர்பாக மதுவரித் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்துவதிலுள்ள வினைத்திறனை மதிப்பீடு செய்தல்  தொடர்பிலான அறிக்கையின் எட்டாவது தொகுதியின் XXIII ஆம் பகுதி;
•    காய்கறி வித்துக்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் செயன்முறையின் செயலாற்றல் தொடர்பிலான அறிக்கையின் எட்டாவது தொகுதியின் XXIV ஆம் பகுதி; மற்றும்
•    மனம்பிட்டிய மணல் அகழ்தல் செயற்திட்டம் தொடர்பான விசேட கணக்காய்வு தொடர்பிலான அறிக்கையின் பத்தாவது தொகுதியின் I ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான  இலங்கைக் கடற்படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை   
(ii)    2019 ஆம் ஆண்டுக்கான அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(iii)    2016 ஆம் ஆண்டுக்கான  கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(iv)    2018 ஆம் ஆண்டுக்கான தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் வருடாந்த அறிக்கை

(v)    1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின்  2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2021 மார்ச் 01 ஆம் திகதிய 2117/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(vi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1), 6 மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 திசெம்பர் 14 ஆம் திகதிய 2206/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்.
(viii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1), 6 மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 திசெம்பர் 24 ஆம் திகதிய 2207/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(ix)    2015 சனவரி 8 ஆம் திகதி ஆரம்பமாகி 2019 நவம்பர் 16 ஆம் திகதி முடிவடைந்த கால எல்லைக்குள் பதவிகளை வகித்த அரசாங்க உத்தியோகஸ்தர்கள், அரச கூட்டுத்தாபன ஊழியர்கள், ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸ் சேவையின் உறுப்பினர்களிற்கு இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் அரசியல் ரீதியான பழிவாங்கல்கள் தொடர்பாக விசாரித்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள்.  
(x)        2015.01.15 தொடக்கம் 2018.12.31 வரையான காலத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல்கள், மோசடிகள் தொடர்பாகப் புலனாய்வு செய்வதற்கான விசாரணை ஆணைக்குழுவின்  அறிக்கை
(xi)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்   இன்டநெஷனல் கொலிஜ் ஒவ் பிஸ்னஸ் அன்ட் டெக்னொலொஜி லிமிட்டெட்டை வணிக முகாமைத்துவத்தில் கௌரவ இளமாணிப் பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து  கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2020 செப்டெம்பர் 25 ஆம் திகதிய 2194/72 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்   காட்சு (KAATSU) - ஹய்லி அட்வான்ஸ்ட் மெடிகல் டெக்னொலொஜி டிறெயினிங் சென்டர் (பிறைவெற்) லிமிட்டெட்டை தாதியியலில் தத்துவவியல் முதுமாணி பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 ஒக்டோபர் 07 ஆம் திகதிய 2196/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்   பெனட்டிக் XVI கத்தலிக் இன்ஸ்ரிரியுட் ஒவ் ஹயர் எடியுகேஷன் (பிறைவெற்) லிமிட்டெட்டை வணிக முகாமைத்துவத்தில் கௌரவ இளமாணிப் பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2020 நவம்பர் 09 ஆம் திகதிய 2201/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்   சினெக் கெம்பஸ் (பிறைவெற்) லிமிட்டெட்டை கற்கை நெறி மூலம் வியாபார நிருவாக முதுமாணிப் பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 திசெம்பர் 28 ஆம் திகதிய 2208/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை   
(xv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்   றோயல் இன்ஸ்டிடியுட் கொழும்பு (பிறைவெட்) லிமிட்டெட்டை சர்வதேச பொருளியல் மற்றும் நிதியியல் வியாபார கௌரவ இளமாணிப் பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2021 சனவரி  01 ஆம் திகதிய 2208/49 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvi)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்   பிஸ்னஸ் மனஜ்மென்ட் ஸ்கூல் (பிறைவெட்) லிமிட்டெட்டை வணிக முகாமைத்துவத்தில் கௌரவ இளமாணிப் பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2021 சனவரி  01 ஆம் திகதிய 2208/49 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xvii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்   கொரைசன் கொலிஜ் ஒப் பிசினஸ் அன்ட் டெக்னொலொஜி (பிறைவெட்) லிமிட்டெட்டை உயிர் தொழில்நுட்பத்தில் கௌரவ விஞ்ஞான இளமாணிப் பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2021 சனவரி  01 ஆம் திகதிய 2208/49 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xviii)    1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி அறவீடு தொடர்பில் வர்த்தக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2020 நவம்பர் 17 ஆம் திகதிய 2202/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சீ.பீ. ரத்நாயக்க                                                            
(ii)    கௌரவ சுசில் பிரேமஜயந்த        -    இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ தயாசிறி ஜயசேக்கர        -    நான்கு மனுக்கள்
(iv)    கௌரவ நிமல் லான்சா                    
(v)    கௌரவ அநுராத ஜயரத்ன                    
(vi)    கௌரவ விஜித ஹேரத்                    
(vii)    கௌரவ புத்திக பத்திறண                    
(viii)    கௌரவ எஸ்.எம். மரிக்கார்            -    மூன்று மனுக்கள்
(ix)    கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன                    
(x)    கௌரவ வசந்த யாப்பாபண்டார        -    மூன்று மனுக்கள்
(xi)    கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ                    
(xii)    கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான                    
(xiii)    கௌரவ சமன்பிரிய ஹேரத்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

ஓய்வூதிய முரண்பாடுகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள்
(ii)    வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்

(iv)    இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து பெண்களை வலுவூட்ட நடவடிக்கை எடுத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 மார்ச் 10ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks