E   |   සි   |  

2021 பெப்ரவரி 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(ii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகம் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii)    அரசாங்க பொறுப்பு முயற்சிகள்  பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  நிதி அமைச்சு தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான  பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iv)    2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாகப் புலனாய்வு செய்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் அல்லது  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை
(v)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடனும் 139 ஆம் பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)  ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின்  மீது இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வித் துறையொன்றை நிறுவுவது தொடர்பில் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2020 சனவரி 30 ஆம் திகதிய 2160/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ டலஸ் அழகப்பெரும                   
(ii)    கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா    -    இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அனுதாபப் பிரேரணைகள்

முன்னாள் பாராளுமன்றச் சபாநாயகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான காலஞ்சென்ற கௌரவ வி.ஜ.மு. லொக்குபண்டார அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


அதனையடுத்து,  மணியளவில் பாராளுமன்றமானது 2021 மார்ச் 09ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks