E   |   සි   |  

சபை அலுவல்கள்


அமரர் கௌரவ டீ.எம்.தசநாயக்க பா.உ. அவர்களின் அனுதாபம் தெரிவிக்கும்
பிரேரணை சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.


பிரேரணை முன்னறிவித்தல்கள்

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியின் தற்போதைய நிலைமை குறித்து மதிப்பிடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு

2009 பெப்ரவரி 29ஆம் திகதி வரை காலத்தை மேலும் நீடிப்பதற்கு பாராளுமன்றச் சபை முதல்வரினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளை (அத்தியாயம் 469)

சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு நேரப் பிரேரணை

"அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுப்படி ஓய்வூதியம் பெறுவோருக்கும் வழங்கப்பட வேண்டும்" என்பது பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ லக்ஷ்மன் நிபுணஆரச்சியினால் பிரேரிக்கப்பட்டது.


அதன் பின்னர், 1422 மணிக்கு 2008 ஆகஸ்ட் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks