E   |   සි   |  

2021 பெப்ரவரி 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)   2016 ஆம் ஆண்டுக்கான ரணவிரு சேவா அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை  
(ii)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை

(iii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடனும் 139 ஆம் பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)  ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின்  மீது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்   நோய்த்தடுப்பாற்றலியல் மற்றும் மூலக்கூற்று மருத்துவவியல் துறை மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் துறை ஆகியவற்றை நிறுவுதல் தொடர்பில் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2020 யூலை 30 ஆம் திகதிய 2186/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடனும் 139 ஆம் பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)  ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின்  மீது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ தொழில்நுட்பவியல் துறையொன்றை நிறுவுதல் தொடர்பில் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2020 யூலை 30 ஆம் திகதிய 2186/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய                                        
(ii)    கௌரவ சீ.பீ. ரத்நாயக்க            -        இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ விஜித ஹேரத்            -        மூன்று மனுக்கள்
(iv)    கௌரவ நாலக பண்டார கோட்டேகொட

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ புத்திக பத்திறண அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டன.

(i)    “வைட் றோஸ் மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்”
(ii)    “ஸ்ரீ பாலாபிவூர்தி வர்தன சமிதியவைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்”
(iii)    “றுஹுணு உதானய அமைப்பைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்”
(iv)    “வர்ள்ட் லய்ப் லய்ன் யோகா நிறுவனத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்”


அதனையடுத்து, 1120 மணியளவில் பாராளுமன்றமானது 2021 பெப்ரவரி 25ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks