E   |   සි   |  

2021 பெப்ரவரி 12ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் - 

•    2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XV ஆம் பகுதியையும் ;
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXI ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் XXII ஆம் பகுதியையும்; மற்றும்
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XV, XVI மற்றும் XVII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் IX ஆம் பகுதியையும், நான்காவது தொகுதியின் VII ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் VII, VIII, IX மற்றும் X ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் வருடாந்த அறிக்கை

(ii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 ஒக்டோபர் 19 ஆம் திகதிய 2198/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(iii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1), 6 மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 ஒக்டோபர் 29 ஆம் திகதிய 2199/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(iv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் காணி அமைச்சு தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ லசந்த அலகியவன்ன        -    எட்டு மனுக்கள்
(ii)    கௌரவ விஜித பேருகொட                                                           
(iii)    கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    தரையோடுகள் இறக்குமதி தொடர்பாக 2021.02.10 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    நாட்டில் அமுலிலுள்ள முஸ்லிம் திருமணச் சட்டம் தொடர்பாக 2021.02.09 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நீதி அமைச்சர் கௌரவ எம். யூ. எம். அலி சப்ரி அவர்கள் பதிலளித்தார்.


அனுதாபப் பிரேரணைகள்

பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i)    மறைந்த கௌரவ (திருமதி) சுரங்கனி எல்லாவல
(ii)    மறைந்த கௌரவ கே. பி. சில்வா
(iii)    மறைந்த கௌரவ கபில் அபேரத்ன


அதனையடுத்து, 1618 மணியளவில் பாராளுமன்றமானது 2021 பெப்ரவரி 23ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks