பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2019 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2019 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்கறிக்கையும்
(v) 2019 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச வைத்திய நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(vi) (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம்
(2020 நவம்பர் 17 ஆம் திகதிய 2202/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை )
(vii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின் கீழ் இலங்கை கட்புல மற்றும் அரங்கேற்றற் கலைகள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குப் பதிலாக 2020 செப்டம்பர் 13 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக ஓய்வுநிலைப் பேராசிரியர் வீரக்கோன் முதியான்சலாகே அபேரத்ன பண்டார அவர்களை நியமித்தல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 செப்டெம்பர் 11 ஆம் திகதிய 2192/61 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii) இலங்கையின் இயற்கை வாயுவுக்கான தேசிய கொள்கை தொடர்பில் வலுச்சக்தி அமைச்சரால் 2020 ஒக்டோபர் 17 ஆம் திகதிய 2197/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இலங்கையின் இயற்கை வாயுவுக்கான தேசிய கொள்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (மேஜர்) பிரதீப் உந்துகொட - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ லலித் எல்லாவல - ஐந்து மனுக்கள்
(iii) கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி
(iv) கௌரவ வீரசுமன வீரசிங்ஹ - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ யதாமிணீ குணவர்தன
(vi) கௌரவ காமினி லொக்குகே - ஆறு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி மற்றும் தரம் 6 இற்கான அனுமதி
மேற்சொன்ன வினாவிற்கு கல்வி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
கோவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையினருக்கான நிவாரணம்
மேற்சொன்ன வினாவிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்
(ii) அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ் தீர்மானம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“வன விலங்குகளிடமிருந்து பயிர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1732 மணியளவில் பாராளுமன்றமானது 2021 பெப்ரவரி 12ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks