பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘B’: அரசாங்க நிதி பற்றிய குழுவில் சேவையாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XII ஆம் பகுதியையும் ;
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XIV ஆம் பகுதியையும் ;
• 2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXX ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் XXI ஆம் பகுதியையும்; மற்றும்
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XI, XII, XIII மற்றும் XIV ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் VII மற்றும் VIII ஆம் பகுதிகளையும், ஒன்பதாவது தொகுதியின் V மற்றும் VI ஆம் பகுதிகள்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியினது—
• XVIII ஆம் பகுதியின் மட்பாண்டக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஓட்டுத் தொழிற்சாலைகளது உற்பத்தி, செயற்பாடு மற்றும் விற்பனை நடவடிக்கைகளை மீளாய்வு செய்தல் தொடர்பிலான அறிக்கை; மற்றும்
• XIX ஆம் பகுதியின் புதிய ஏற்றுமதி செயன்முறைப்படுத்தல் வலயத்தை தோற்றுவிக்கும் நடைமுறையின் செயலாற்றலை மதிப்பீடு செய்தல் தொடர்பிலான அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் கொள்கைக் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த அறிக்கைகளும் கணக்குகளும்
(iv) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபையின் வருடாந்த அறிக்கை
(v) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை
(vi) 2016/2017 ஆம் ஆண்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(vii) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை.
(viii) 2016 ஆம் ஆண்டுக்கான ஆட்களையும் ஆதனங்களையும், கைத்தொழில்களையும் புனரமைப்புச் செய்யும் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கையும் நிதிக்கூற்றும்
(ix) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய அருங்கலைகள் பேரவையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குக் கூற்றுக்களும்
(x) 2019 ஆம் ஆண்டுக்கான நீதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xi) 2019 ஆம் ஆண்டுக்கான சட்ட வரைஞர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xii) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2021 சனவரி 30 ஆம் திகதிய 2212/58 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xiii) 2020 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2020.11.30 முதல் 2020.12.18 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xiv) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1), 6 மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 ஆகஸ்ட் 17 ஆம் திகதிய 2189/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xv) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 ஆகஸ்ட் 17 ஆம் திகதிய 2189/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xvi) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 செப்தெம்பர் 15 ஆம் திகதிய 2193/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xvii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1), 6 மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 சனவரி 05 ஆம் திகதிய 2209/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xviii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 235) 10(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்கத் தீர்வை மீதான மேலதிக கட்டண அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2020 நவம்பர் 23 ஆம் திகதிய 2203/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xix) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதிச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி அறவீடு தொடர்பில் வர்த்தக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2020 ஒக்டோபர் 28 ஆம் திகதிய 2199/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xx) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதிச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி அறவீடு தொடர்பில் வர்த்தக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2020 ஒக்டோபர் 29 ஆம் திகதிய 2199/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxi) 1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க, தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் இரத்தினக்கல், ஆபரண உரிமக் கட்டணம் தொடர்பில் கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 மார்ச் 02 ஆம் திகதிய 2165/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ மஹிந்த அமரவீர
(ii) கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண - ஐந்து மனுக்கள்
(iii) கௌரவ கயந்த கருணாதிலக்க - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ அநுர திசாநாயக்க - ஐந்து மனுக்கள்
(v) கௌரவ றோஹண திஸாநாயக்க - மூன்று மனுக்கள்
(vi) கௌரவ ஹர்ஷண ராஜகருணா
(vii) கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்
(viii) கௌரவ எச். நந்தசேன - இரண்டு மனுக்கள்
(ix) கௌரவ நலின் பிரனாந்து - இரண்டு மனுக்கள்
(x) கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ
(xi) கௌரவ டீ. வீரசிங்க
(xii) கௌரவ சமன்பிரிய ஹேரத்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
டி.எஸ்.குணசேகர தனியார் கம்பனிக்கு கடன் வழங்கும் இலங்கை வங்கி
மேற்சொன்ன வினாவிற்கு நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
நாட்டில் அமுலிலுள்ள முஸ்லிம் திருமணச் சட்டம்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) கோவிட்-19 காரணமாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தொடர்பான கூற்றொன்றினை வர்த்தக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.
(ii) தேயிலை சிறு பயிர்ச்செய்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக 2021.01.20 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பெருந்தோட்ட அமைச்சர் கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ திலிப் வெதஆரச்சி
கௌரவ ரன்ஜன் ராமநாயக்க அவர்களை சந்திப்பதற்காக தங்கல்ல சிறைச்சாலைக்கான தன்னுடைய விஜயம்
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ (வண.) அதுரலியே ரதன தேரர் அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டன.
(i) “விவாக (பொது) (திருத்தம்)”
(ii) “முஸ்லிம் திருமணம், மணநீக்கம் (நீக்கம்)”
நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i) மற்றும் (ii) பாதுகாப்பு அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“முன்பள்ளி காப்பாளருக்கான மாதாந்த சம்பளம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அகில எல்லாவல அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1737 மணியளவில் பாராளுமன்றமானது 2021 பெப்ரவரி 10ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks