பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : தவிசாளர் குழாமில் சேவையாற்றவுள்ள மேலதிக பாராளுமன்ற உறுப்பினர்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2020 நவம்பர் 17 ஆம் திகதிய 2202/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ அமரகீர்த்தி அதுகோரள
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான வன நிலங்களை பாதுகாத்தல் தொடர்பாக 2020.11.19 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்கள் எழுப்பிய வினாவிற்கு வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் கௌரவ சீ.பீ. ரத்நாயக்க அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கௌரவ நீதி அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i) புலமைச் சொத்து (திருத்தம்) - 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, புலமைச் சொத்துச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii) சான்று (திருத்தம்) - (14 ஆம் அத்தியாயமான) சான்று கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iii) பிணை (திருத்தம்) - 1997 ஆம் அண்டின் 30 ஆம் இலக்க, பிணைச் சட்டத்தினைத் திருத்துவதற்கானது
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - குழு
ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட எட்டாம் நாள் - குழு நிலை விவாதம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“நெலுவ - லங்காகம வீதி நிர்மாணம் காரணமாக சிங்கராஜ வனத்திற்கு ஏற்பட்டுள்ள சேதங்கள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ நலீன் பண்டார ஜயமஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1755 மணியளவில் பாராளுமன்றமானது 2020 நவம்பர் 27ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2021]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks