E   |   සි   |  

2020 நவம்பர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ : இன்றைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினா தொடர்பான தீர்ப்பு


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(ii)    2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, நிர்மாணத்தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் 49(1) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 58 ஆம் பிரிவின் கீழ் நிர்மாணத் தொழிலில் தேர்ச்சி பெற்ற நிர்மாண வேலையாளர்கள், நிர்மாண அமைவிட மேற்பார்வையாளர்கள், நடுமட்டத் தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் ஏனைய உயர் தொழிலாளர்கள் பற்றிய இடாப்பு தொடர்பில்  நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 யூன் 25 ஆம் திகதிய 2181/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iii)    2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, நிர்மாணத்தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் 48(6) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 58 ஆம் பிரிவின் கீழ் கைவினைத் தொழில் அடையாள அட்டைகள் தொடர்பில்  நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2020 யூன் 25 ஆம் திகதிய 2181/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iv)    2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, நிர்மாணத்தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் 32(5) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 58 ஆம் பிரிவின் கீழ் தகைமைபெற்ற ஆட்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கைமுறை தொடர்பில்  நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2020 யூன் 25 ஆம் திகதிய 2181/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(v)    2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, நிர்மாணத்தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் 36(1) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 58 ஆம் பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கை முறைக்கான வழிகாட்டு நெறிகள் தொடர்பில்  நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 யூன் 25 ஆம் திகதிய 2181/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vi)    2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, நிர்மாணத்தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் 42 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 58 ஆம் பிரிவின் கீழ் ஆதன அபிவிருத்தியாளர்களைப் பதிவுசெய்தல் தொடர்பில்  நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2020 யூன் 25 ஆம் திகதிய 2181/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகம் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல                    
(ii)    கௌரவ டலஸ் அழகப்பெரும                    
(iii)    கௌரவ வாசுதேவ நாணாயக்கார                      -     இரண்டு மனுக்கள்
(iv)    கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா                    
(v)    கௌரவ புத்திக பத்திறண                                    -     இரண்டு மனுக்கள்
(vi)    கௌரவ அசோக்க பிரியந்த
(vii)    கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2021) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2021) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட நான்காம் நாள் இன்றாகும்.

ஒதுக்கீட்டுச் சட்டமூல (2021) இரண்டாம் மதிப்பீடு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஆதரவாக 151 பேரும் எதிராக 52 பேரும் வாக்களித்தனர்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2021) முழுப் பாராளுமன்ற குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


அனுதாபப் பிரேரணை

ராமாஞ்ஞ பீடத்தின் அதி வண. மகாநாயக்க தேரர், அக்கமஹா பண்டித்த நாபன்னே பிரேமசிறி தேரர் தொடர்பான அனுதாபப் பிரேரணை பிரதம அமைச்சர் கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களினால் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1755 மணியளவில் பாராளுமன்றமானது 2020 நவம்பர் 23ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2021]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks