E   |   සි   |  

2020 ஒக்டோபர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ : “அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தம்” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிப் பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(ii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின்  கீழ்,  வரையறுக்கப்பட்ட ஈசொப்ட் மெற்றோ கம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் தகவல் தொழிநுட்பவியல் இளமாணி சிறப்பு பட்டம் தொடர்பில் நகரத்திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2019 செப்தெம்பர் 03 ஆம் திகதிய 2139/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின்  கீழ்,  சேஜஸ் கம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் வியாபார நிர்வாக இளமாணி பட்டம் தொடர்பில் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2019 செப்தெம்பர் 20 ஆம் திகதிய 2141/81 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்,  நஷனல் ஸ்கூல் ஒப் பிஸ்னஸ் மனேஜ்மன்ட் லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் நிகழ்வுகளில் வியாபார முகாமைத்துவ இளமாணி பட்டம் தொடர்பில் உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2020 பெப்ரவரி 27 ஆம் திகதிய 2164/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின்  கீழ்,  எஸ்.எல்.ரி. கம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் சுற்றுச் சூழல் தொழில்நுட்பவியலில் தொழில்நுட்பவியல் இளமாணி சிறப்புப் பட்டம் மற்றும் உயிர் முறைமையியல் பொறியியல் விஞ்ஞான இளமாணிச் சிறப்புப் பட்டம்  தொடர்பில் உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2020 பெப்ரவரி 27 ஆம் திகதிய 2164/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின்  கீழ்,  ஹொரைசன் கொலிஜ் ஒப் பிஸ்னஸ் அன்ட் டெக்னோலொஜி (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் கல்வி இளமாணி சிறப்புப் பட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியலில் விஞ்ஞான இளமாணி / தகவல் தொழில்நுட்பவியலில் விஞ்ஞான இளமாணிச் சிறப்புப் பட்டம்  தொடர்பில் உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2020 பெப்ரவரி 27 ஆம் திகதிய 2164/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின்  கீழ்,  காட்சு (KAATSU) - கய்லி அட்வான்ஸ்ட் மெடிக்கல் டெக்னோலொஜி றெயினிங் சென்ரர் (பிறைவேட்) லிமிடெட் (KIU) நிறுவனத்தினால் வழங்கப்படும் முகாமைத்துவ மூலோபாயத்தில் வியாபார நிருவாக முதுமாணி பட்டம் தொடர்பில் உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2020 பெப்ரவரி 27 ஆம் திகதிய 2164/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின்  கீழ்,  இலங்கை இரசாயனவியல் நிறுவகத்தினால் வழங்கப்படும்  இரசாயன விஞ்ஞானத்தில் கௌரவ விஞ்ஞான இளமாணி பட்டம் தொடர்பில் உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 மார்ச் 11 ஆம் திகதிய 2166/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ துமிந்த திசாநாயக்க        -    மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ றோஹண திஸாநாயக்க    -    மூன்று மனுக்கள்
(iii)    கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாஸ

மினுவங்கொட பிரெண்டிக்ஸ் கொத்தணியின் கொவிட் - 19 தொற்று பற்றிய விபரங்கள்

மேற்சொன்ன வினாவிற்கு சுகாதார அமைச்சர் கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பின்வரும் சட்டமூலங்களை கௌரவ பிரதம அமைச்சரும் நிதி அமைச்சருமானவர் பிரேரித்தார்-

(i)    ஒதுக்கீடு (2020) - 2020 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக, இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அந்நிதியாண்டின் போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாட்டைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடுகளின் மீதான செலவினத்திற்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குரிய அல்லது அதன் கையாளுகையிலுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணங்கள் என்ற வகையாக கொடுப்பனவை இயலச் செய்வதற்கும்; திரட்டு நிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
(ii)    ஒதுக்கீடு (2021) - 2021 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அந்நிதியாண்டின் போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாட்டைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடுகளின் மீதான செலவினத்திற்கு அந்நிதியாண்டின் போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குரிய அல்லது அதன் கையாளுகையிலுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணங்கள் என்ற வகையாக கொடுப்பனவை இயலச் செய்வதற்கும்; திரட்டுநிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இலங்கை ஏற்றுமதிச் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்

சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“புத்தளத்தில் மனித - யானை மோதலுக்கான தீர்வு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2020 ஒக்டோபர் 21ஆம் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks