E   |   සි   |  

2020 ஆகஸ்ட் 28ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’: பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை
(ii)    2019 ஆம் ஆண்டுக்கான நிதியமைச்சின் ஆண்டறிக்கை
(iii)    அரையாண்டு  அரசிறை நிலைமை அறிக்கை – 2020
(iv)    தேர்தலுக்கு முன்னரான வரவுசெலவுத் திட்ட நிலைமை அறிக்கை - 2020


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாஸ

புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச ஊழியர்களின் சேவையை நிறுத்துதல்


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ கெவிந்து குமாரதுங்க

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட திசைதிருப்பல் நிகழ்ச்சித்திட்டத்தின்போது எதிர்கொண்ட பிரச்சினைகள்


பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i)    சட்டவாக்க நிலையியற் குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 113 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக சட்டவாக்க நிலையியற் குழுவானது, தவிசாளராக பிரதிச் சபாநாயகரையும், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் மேலும் பதினைந்து (15) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.

(ii)    நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 116 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவானது, தவிசாளராக சபாநாயகரையும், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் மேலும் ஒன்பது (9) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.

(iii)    சபைக் குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 117 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக சபைக் குழுவானது, தவிசாளராகச் சபாநாயகரையும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் மேலும் பதினான்கு (14) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.

(iv)    ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய  குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 118 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பதினாறு (16) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

(v)    பொது மனுக்கள் பற்றிய குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 122 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக பொது மனுக்கள் பற்றிய குழுவானது, தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் இருபத்தி மூன்று (23) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

(vi)    பின்வரிசைக் குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 126 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக, பின்வரிசைக் குழுவானது அரசாங்கக் கட்சியின்  முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் அரசாங்கக் கட்சியின் எட்டு (8) பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் எட்டு (8) பின்வரிசை உறுப்பிர்கள் ஆகியோரைக் கொண்டிருக்குமாக.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.:-

(i)    அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் [கணக்கு வாக்குப் பணம்]
(ii)    உள்ளூர் திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2020 செப்டெம்பர் 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks