E   |   සි   |  

2020 ஆகஸ்ட் 27ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -      
•    2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XVI ஆம் பகுதியையும் ;
•    2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXI ஆம் பகுதியையும்;
•    2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XVII மற்றும் XVIII ஆம் பகுதிகளையும்;
•    2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXVI ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் XVI, XVII மற்றும் XIII ஆம் பகுதிகளையும்;
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXV, XXVI, XXVII மற்றும் XXVIII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XIII மற்றும் XIV ஆம் பகுதிகளையும், ஒன்பதாவது தொகுதியின் XIII, XIV, XV, XVI மற்றும் XVII  ஆம் பகுதிகளையும்; மற்றும்
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் I  ஆம் பகுதி

(ii)    இலங்கைச் இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதியின் விசேட கணக்காய்வு அறிக்கைகள் - VII மற்றும் XI ஆம் பகுதிகள்


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாஸ

அரச துறை ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளை அதிகரித்தல்


பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i)    பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது, சபாநாயகரைத் தவிசாளராகவும் பிரதிச்சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் வேறு பத்தொன்பது (19) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.

(ii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் இருபத்திரெண்டு (22) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

(iii)    அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் இருபத்திரெண்டு (22)  உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.


சபாநாயகரின் அறிவித்தல்

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையில் முன்வைக்கப்பட்டன:-

(i)    அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் [கணக்கு வாக்குப் பணம்]
(ii)    உள்ளூர் திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்

விவாதிக்கப்பட்டதுடன், நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2020 ஆகஸ்ட் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks