பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமானது.
பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்ற அமர்வைக் கூட்டுவதாக அறிவித்து மேன்மைதங்கிய சனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட பிரகடனங்களை வாசித்ததோடு சபாநாயகர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.
சபாநாயகர் தெரிவு
9 ஆவது புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, பா.உ. அவர்கள் கெளரவ தினேஷ் குணவர்தன, பா.உ., கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ. ஆகியோரினால் முறையே முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டார். அதனையடுத்து, புதிய சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட கெளரவ மஹிந்த யாபா அபேவர்தன அவர்கள் முன்மொழிந்து, வழிமொழியப்பட்டவர்களினால் அக்கிராசனத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். கெளரவ சபாநாயகர் அக்கிராசனத்திற்கு வந்து அதில் அமர முன்னர் மிகச் சுருக்கமாக சபைக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் கெளரவ சபாநாயகர் தலைமை வகித்ததோடு, சட்டப்படி உறுதிப்பிரமாணம் செய்து மேசையிலுள்ள உறுப்பினர்கள் பட்டியலில் கையொப்பமிட்டார்.
அதன் பின்னர், வருகை தந்திருந்த கெளரவ உறுப்பினர்கள் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதோடு, மேசை மீதுள்ள உறுப்பினர்கள் பட்டியலில் கையொப்பமிட்டனர்.
அரசாங்க தரப்பு மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த பல்வேறு அரசியட் கட்சிகளின் தலைவர்களினால் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டன. கெளரவ சபாநாயகர் அதற்கு பதிலுரை ஆற்றினார்.
பிரதி சபாநாயகர் தெரிவு
9 ஆவது புதிய பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பா.உ. அவர்கள் மஹிந்த அமரவீர, பா.உ., கௌரவ நிமல் லான்சா, பா.உ. ஆகியோரினால் முறையே முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டார்.
குழுக்களின் பிரதித் தவிசாளர் தெரிவு
9 ஆவது புதிய பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவிக்கு கௌரவ அங்கஜன் இராமநாதன், பா.உ. அவர்கள் கௌரவ நிமல் சிறிபால த சில்வா, பா.உ., கௌரவ துமிந்த திசாநாயக்க, பா.உ. ஆகியோரினால் முறையே முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டார்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
புதிய பாராளுமன்றத்தின் பாராளுமன்றச் சபை முதல்வர் மற்றும் அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் பதவிகளுக்கு முறையே கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ., மற்றும் கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ. ஆகியோர் நியமிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கௌரவ சஜித் பிரேமதாச அவர்களை கௌரவ சபாநாயகர் அவர்கள் அங்கீகரித்தார்.
கௌரவ சபாநாயகர் அமர்வை பி.ப. 3.00 மணி வரை இடைநிறுத்தினார்.
அரசாங்க கொள்கைக் கூற்றினை முன்வைத்தல்
பி.ப. 3.00 மணிக்கு சபை மீண்டும் கூடியதுடன் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அரசாங்க கொள்கைக் கூற்றினை முன்வைத்தார்.
அதனையடுத்து, கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் 2020 ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 0930 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என்ற பிரேரணையை பிரேரித்தார்.
அதன்படி, 1535 மணியளவில் பாராளுமன்றமானது 2020 ஆகஸ்ட் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

