பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘B’: கௌரவ ரன்ஜன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகள் தொடர்பானது
‘C’ : இணைந்த வருடாந்த பொதுக் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி நிதியம் பற்றிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களுக்குப் பதிலாக கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாஸ
பெண்கள் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் அரசியலில் ஈடுபடல்
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
அரச அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம்
மேற்சொன்ன வினாவிற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்ஹ அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ ரஊப் ஹகீம்
தன்னைப் பற்றிய பிழையான ஊடக அறிக்கை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
தாவர, வனவிலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் தினசரி ஊதியம்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அநுராத ஜயரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1928 மணியளவில் பாராளுமன்றமானது 2020 ஜனவரி 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks