பார்க்க

E   |   සි   |  

2019 செப்டெம்பர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த செயற்திறன் அறிக்கை

(iii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை இணக்கப்பாட்டுப் பணியகத்தின் ஆண்டறிக்கை
(iv)    2017 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(v)    2015 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(vi)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(vii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை

(viii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர்  கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்குப் பதிலாக கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார

(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு கல்விசாரா ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தல்

மேற்சொன்ன வினாவிற்கு நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் கௌரவ ரஊப் ஹகீம் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

யாழ்ப்பாணத்தில் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சி தொடர்பாக 2019.09.05 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு நிதி அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

(i)    மக்கள் வங்கி (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii)    அரசியலமைப்பின் கீழ் தீர்மானம்
(iii)    இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டத்தின் கீழ் தீர்மானம்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1418 மணியளவில் பாராளுமன்றமானது 2019 செப்டெம்பர் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks