பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : நேற்று பாராளுமன்றத்தில் வினாக்களுக்கு விடையளிக்க அமைச்சர்கள் சமூகமளிக்காமை பற்றிய ஊடக அறிக்கைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பானது
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முப்பத்தொன்பதாவது ஆண்டறிக்கை
(iii) 2017 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(iv) 2017 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(v) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் பயணிகள் அல்லது பண்டங்களுக்கான அனைத்துப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தல் தொடர்பில் சனாதிபதி அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டு, 2019 ஆகஸ்ட் 27 ஆம் திகதிய 2138/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ பிரிவின் கீழ் ஸ்ரீ லங்கா இன்ஸ்டிடியூட் ஒப் இன்போமேஷன் டெக்னொலொஜி (உத்தரவாதம்) லிமிட்டெட் நிறுவனத்தைப் பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 ஏப்றல் 23 ஆம் திகதிய 2120/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ பிரிவின் கீழ் நஷனல் ஸ்கூல் ஒப் பிஸ்னஸ் மனேஜ்மன்ட் லிமிட்டெட் நிறுவனத்தைப் பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மே 2 ஆம் திகதிய 2121/43 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ பிரிவின் கீழ் எஸ். எல். ரி. கெம்பஸ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தைப் பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மே 2 ஆம் திகதிய 2121/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ பிரிவின் கீழ் கலம்போ இன்டர்நஷனல் நோட்டிங்கல் அன்ட் என்ஜினியேரிங் கொலேஜ் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தைப் பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மே 2 ஆம் திகதிய 2121/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ பிரிவின் கீழ் ஸ்ரீ லங்கா இன்ஸ்டிடியூட் ஒப் நனோ டெக்னொலொஜி (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தைப் பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மே 10 ஆம் திகதிய 2122/53 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ பிரிவின் கீழ் நஷனல் ஸ்கூல் ஒப் பிஸ்னஸ் மனேஜ்மன்ட் லிமிட்டெட் நிறுவனத்தைப் பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 மே 29 ஆம் திகதிய 2125/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
யாழ்ப்பாண விமான நிலைய அபிவிருத்திக்காக கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் காணிகளுக்கான இழப்பீடு
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கும்; வெளிநாட்டு வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்கள் அறவீடொன்றை விதிப்பதற்காக ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ் விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக
“நிதி”
எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
அதனையடுத்து, 1118 மணியளவில் பாராளுமன்றமானது 2019 செப்டெம்பர் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks