பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்கும்
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய நீரியல் வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(iii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை அறிக்கை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்குப் பதிலாக கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரண அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ எஸ். எம். சந்திரசேன
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம
தன்னைப் பற்றி 2019.08.22 ஆம் திகதிய ‘சிலோன் டெய்லி நிவுஸ்’ இல் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி அறிக்கை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
மக்கள் வங்கி (திருத்தச்) சட்டமூலம்
விவாதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“தோட்டத்துறை பாடசாலைகளில் உயர்தர கணித மற்றும் விஞ்ஞான பாடங்களைக் கற்பதற்கான வசதியளித்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1821 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஆகஸ்ட் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks