பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 29(2)(ஈ) ஆம் பிரிவின் கீழ் ஏற்றுமதியாளர்களைப் பதிவு செய்வதற்கான திட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பில் அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 ஏப்பிறல் 11 ஆம் திகதிய 2118/60 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ புத்திக பத்திறண - ஆறு மனுக்கள்
(ii) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
“இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம்” தொடர்பான கூற்றொன்றினை மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் முன்வைத்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க
“இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம்” பற்றி 2019.08.07 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட சிலோன் டுடே செய்தி அறிக்கை
ஒத்திவைப்புப் பிரேரணை
“வெளிநாடுகள் / வெளிநாட்டு முகவர் நிறுவனங்களுடன் அரசு / அரசு நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களுக்கு பாராளுமன்ற ஒப்புதல் பெறுதல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1655 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஆகஸ்ட் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks