E   |   සි   |  

2019 ஏப்ரல் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ், சர்வதேச அரச பத்திரங்கள் வழங்குதல் தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 பெப்ரவரி 27 ஆம் திகதிய 2112/17 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ காமினி லொக்குகே அவர்களுக்குப் பதிலாக கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை (2018.02.23 முதல் 2018.10.12 வரை) அக்குழுவின் தவிசாளர் கௌரவ லசந்த அலகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்குப் பதிலாக கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ அஜித் மான்னப்பெரும
(ii)     கௌரவ லஸந்த அலகியவன்ன

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ

முறைகேடான சிற்றளவு கடன்களை பதிவழிப்பு செய்தல்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2019) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - ஒதுக்கப்பட்ட இருபத்திநான்காம் நாள் - குழு நிலை விவாதம்


அதனையடுத்து, 1916 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஏப்ரல் 05ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[வரவு செலவுத் திட்டம் 2019]

 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks