பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி காரணங்களுக்காக காணி விடுவித்தல் தொடர்பான பரிந்துரைகள் பற்றிய குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் ஆண்டறிக்கையும் கணக்குக் கூற்றும்
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களுக்குப் பதிலாக கௌரவ ஹேஷா விதானகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்குப் பதிலாக கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ஏ. டி. பிரேமதாச
(ii) கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் பழிவாங்கல் தொடர்பானது
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - ஒதுக்கப்பட்ட பதினெட்டாம் நாள் - குழு நிலை விவாதம்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 9 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) வரையறுக்கப்பட்ட இலங்கை திரிபோஷா கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2013
(ii) வரையறுக்கப்பட்ட இலங்கை திரிபோஷா கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2011
(iii) வரையறுக்கப்பட்ட இலங்கை திரிபோஷா கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2012
(iv) அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(v) அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2015
(vi) அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2015
(vii) அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(viii) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“ஈ.ரீ.ஐ. நிதிக் கம்பனியில் முதலீடு செய்தோருக்கான நிவாரணம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மார்ச் 28ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks