பார்க்க

E   |   සි   |  

2017 மே 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─

• 2012 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஆறாவது தொகுதியின் XXV ஆம் பகுதியையும்;
• 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஆறாவது தொகுதியின் XI, XII, XIII மற்றும் XIV ஆம் பகுதிகளையும்;
• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XX ஆம் பகுதியையும்    மூன்றாவது தொகுதியின் VI ஆம் பகுதியையும் ஆறாவது தொகுதியின் I, II, III, IV, V, VI, VII, VIII, IX  மற்றும் X ஆம் பகுதிகளையும்; மற்றும் 
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XII மற்றும் XIII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் IV ஆம் பகுதியையும்

சமர்ப்பித்ததுடன், இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2016 ஆம் ஆண்டுக்கான சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் செயற்பாட்டு அறிக்கை

(ii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை அச்சீட்டு நிறுவகத்தின் ஆண்டு அறிக்கை


பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 47 (5) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) பாராளுமன்ற  நிலையியற் கட்டளை இல. 47 (5) இன் கீழ், “லசாலியன் சமூக கல்விச் சேவைகள் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii) பாராளுமன்ற  நிலையியற் கட்டளை இல. 47 (5) இன் கீழ், “சர்வதேச பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் பேரவை (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார                   
(ii) கௌரவ சஜித் பிரேமதாஸ                   
(iii) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே                       -           இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிகழும் அண்மைய நடவடிக்கைளினால், நாட்டில் உருவாகியுள்ள முரண்பாட்டு  சூழ்நிலை தொடர்பானது

(ii) கௌரவ அநுர திசாநாயக்க

நாட்டில் நடைபெறுகின்ற இனவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் தொல்பொருட்கள் தொடர்பாக 2017.03.07 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்

திருத்தங்களுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வேலையில்லாப் பட்டதாரிகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1924 மணியளவில் பாராளுமன்றம் 2017 மே 25ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks