பார்க்க

E   |   සි   |  

2017 மே 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  பிரேசில் நாட்டில் உள்ள இலங்கைத்  தூதரகத்தின் அலுவலகம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா, நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியின் அலுவலகம் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை மத்திய வங்கிக்கு ஏற்பட்ட செலவுகளை ஒவ்வொரு வளாகம் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற தெரிகுழுவில் சேவையாற்றுவதற்கு உறுப்பினர்களை நியமித்தல்

‘B’ :  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்

‘C’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்

‘D’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய மிருகக்காட்சிச்சாலைத் திணைக்களம்
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான அனர்த்த முகாமைத்துவ அமைச்சு
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான சட்ட ஆணைக்குழுத் திணைக்களம்
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்
(v) 2016 ஆம் ஆண்டுக்கான தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(vi) 2013 ஆம் ஆண்டுக்கான லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் ஆண்டறிக்கை

(vii) 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டத்தின் 118 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 142 ஆவது பிரிவின் கீழ், மருத்துவ உபகரணங்கள் விலை குறித்தல் தொடர்பாக சுகாதார, போசணை மற்றும் சுதேச  மருத்துவ அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 பெப்புருவரி 17 ஆம் திகதிய 2006/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(viii) 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தின் 60 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும், சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ், நீதி அமைச்சரினால்  ஆக்கப்பட்டு, 2017 மாச்சு 27 ஆம் திகதிய 2012/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி

(ix) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க,  ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ்,  செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரினால்  ஆக்கப்பட்டு, 2017 மாச்சு 21 ஆம் திகதிய 2011/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் சார்பாக குழு உறுப்பினர் கௌரவ எட்வட் குணசேகர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(iii) சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை  அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ திலிப் வெதஆரச்சி                   
(ii) கௌரவ வசந்த அலுவிஹாரே                   
(iii) கௌரவ அருந்திக்க பர்னாந்து                   
(iv) கௌரவ எச்.ஆர். சாரதீ துஷ்மந்த                   
(v) கௌரவ நிஹால் கலப்பத்தி                   
(vi) கௌரவ எட்வட் குணசேகர                   
(vii) கௌரவ ஜே.சீ. அலவத்துவல                -       இரண்டு மனுக்கள்
(viii) கௌரவ க. துரைரெட்ணசிங்கம்            -       மூன்று மனுக்கள்
(ix) கௌரவ அஜித் மான்னப்பெரும                   
(x) கௌரவ மயில்வாகனம் திலகராஜா  
(xi) கௌரவ பந்துல லால் பண்டாரிகொட

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துதல் தொடர்பானது

(ii) கௌரவ அநுர திசாநாயக்க

பிலியந்தலையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பானது


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தைத் திருத்துவதற்காக

“கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற் கோலாசானுமான கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


தெரிகுழுக்கள்

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பளித்தல் மற்றும் அவற்றின் இடைநேர்விளைவான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற தெரிகுழு

இதன் அறிக்கையை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால எல்லையை 2017 நவம்பர் மாதம் 23ஆம் திகதிவரை காலத்தை நீடிப்பதற்கான உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமாகிய கெளரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஏழு தீர்மானங்கள்

சபையினால் நிறைவேற்றப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ முஜிபுர் ரஹுமான் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2017 மே 24ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks