பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி லொத்தர் சபை
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைப்பணிப்பொருட்கள் சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) வரையறுக்கப்பட்ட லங்கா சதொசவினால் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அரிசி இறக்குமதி செயற்பாடு சம்பந்தமான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் சார்பாக கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே அவர்களினால் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ காமினி லொக்குகே அவர்களினால் மூன்று பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகுணர்ச்சிக் கலை நிறுவகத்திலிருந்து வெளியாகும் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு தொடர்பானது
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
சுதேச மருத்துவ நிறுவகத்திற்கான புதிய பாடத்திட்டத்தினை அறிமுகஞ் செய்தல் தொடர்பானது
அனுதாபப் பிரேரணைகள்
முன்னாள் பிரதம அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான காலஞ்சென்ற கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணையின் தொடர்ச்சி எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவுறுத்தப்பட்டது.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
பேராதனை பல்கலைக்கழகத்தின் லலித் அதுலத்முதலி மண்டபத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(i) வெளிநாட்டுச் செலாவணியை மேம்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் ஏற்பாடுசெய்வதற்கும்; வெளிநாட்டுச் செலாவணியை மேம்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான பொறுப்பை அரசாங்கத்தின் முகவரென்ற முறையில் மத்திய வங்கிக்கு உரித்தாக்குவதற்கும்; (423 ஆம் அத்தியாயமான) செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை நீக்குவதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
“வெளிநாட்டுச் செலாவணி”
எனும் சட்டமூலத்தினை உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பிரேரித்தார்.
(ii) 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, பொருளாதாரச் சேவை விதிப்பனவுச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 153 முதல் 156 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு அறிவித்தல்கள்
(ii) விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற் கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மகாவெலி அபிவிருத்தி கருத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான நட்டஈடு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1852 மணியளவில் பாராளுமன்றம் 2017 மே 03ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks