பார்க்க

E   |   සි   |  

2017 ஏப்ரல் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2015 ஆம் ஆண்டுக்கான தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(iii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ அப்துல் ஹலீம்                   
(ii) கௌரவ நிரோஷன் பெரேரா               -           இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ அசோக் அபேசிங்க                -           இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ ஜயந்த சமரவீர                       -          மூன்று மனுக்கள்
(v) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ   -           ஐந்து மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ நாலக்க பிரசாத் கொலொன்னே அவர்களுக்கு “இலங்கை கட்டிட சேவைகள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவக (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1124 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஏப்ரல் 07ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks