பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : கௌரவ எம்.ஏ. சுமந்திரன், பா.உ. அவர்களின் பாதுகாப்பு நிலைமை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம் (ஒம்புட்ஸ்மன்)
(ii) 2013/2014 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா ஸ்டேட் டிரேடிங் (ஜெனரல்) கோப்பரேஷன் நிறுவனம்
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி அதிகாரசபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ திலக் மாரபன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ லக்கி ஜயவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ ரன்ஜித் அலுவிஹாரே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv) சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் பொதுமனு சமர்ப்பிக்கப்பட்டது.
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ தினேஷ் குணவர்தன
அரிசியின் உச்சமட்ட சில்லறை விலையை தீர்மானிக்கும் போது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்திலுள்ள நிர்ணயிக்கப்பட்ட விதிகள் மீறலினை நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக தலையீடு செய்தல் தொடர்பானது
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
அநுராதபுர மாவட்டத்திலுள்ள மொரவெவ கிராமத்தில் அமைந்துள நீர்ப்பாசன தாங்கிகளை புனரமைத்தல் தொடர்பானது
(iii) கௌரவ அநுர திசாநாயக்க
சரியான ஊக்குவிப்பு செயல்முறை இன்மை மற்றும் இதர தொடர்புபட்ட பிரச்சினைகள் காரணமாக இலங்கை கடற்படையிலுள்ள மாலுமிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தவிசாளர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களினால் 2017 பெப்ரவரி 08 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அக்குழுவின் மூன்றாவது அறிக்கை தொடர்பாக கௌரவ நிதி அமைச்சர் அவர்கள் சபையில் கூற்றினை முன்வைத்தார்.
சிறப்புரிமை
தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்களால் 2016 திசெம்பர் மாதம் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம்
(ii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(iv) வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டமூலம்
(v) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(vi) பிரேசில் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அலுவலகம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா, நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியின் அலுவலகம் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை மத்திய வங்கிக்கு ஏற்பட்ட செலவுகளை ஒவ்வொரு வளாகம் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான தெரிகுழு (கௌரவ சந்தித் சமரசிங்க அவர்களால் பிரேரிக்கப்பட்டதுடன் கௌரவ முஜிபுர் ரஹுமான் அவர்களால் வழிமொழியப்பட்டது)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் காலதாமதம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ டலஸ் அழகப்பெரும அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1926 மணியளவில் பாராளுமன்றம் 2017 பெப்ரவரி 21ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks