பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை மகாவலி அதிகார சபை
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான மன்றம்
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான தேசியப் பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகம்
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம்
(v) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(vi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4) ஆம் பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் இலங்கை கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுர்வேத நிறுவகத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக தகுதிவாய்ந்த அதிகாரியொருவரை நியமித்து 2016 செப்தெம்பர் 02 ஆம் திகதிய 1982/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii) 2014 ஆம் ஆண்டுக்கான இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி - ஏழு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
‘ஆவா’ குழு சம்பந்தமாக அரசாங்கத்தின் நிலைப்பாடு
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ எஸ். எம். மரிக்கார் அவர்களுக்கு “த இன்ஸ்ரிரியூட் ஒவ் சோ்டிபைட் பப்ளிக் எக்கவுன்டன்ஸ் (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட மூன்றாம் நாள் இன்றாகும்.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“களுத்துறை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1854 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2016 நவம்பர் 16ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2017]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks