பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான சமூக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சு
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்டச் செயலகம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்துச் சபை
(iv) 2012 - 2013 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா ஸ்டேட் டிரேடிங் (ஜெனரல்) கோப்பரேடிவ் லிமிடெட்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(v) 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் (அத்தியாயம் 131) கீழான ஒழுங்குவிதிகள்
(vi) 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டுச் )சட்டத்தின் கீழான கட்டளைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ வஜிர அபேவர்தன - நான்கு மனுக்கள்
(iii) கௌரவ வசந்த அலுவிஹாரே - நான்கு மனுக்கள்
(iv) கௌரவ இரான் விக்கிரமரத்ன
(v) கௌரவ லக்கி ஜயவர்தன - மூன்று மனுக்கள்
(vi) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே - ஆறு மனுக்கள்
(vii) கௌரவ புத்திக பத்திறண - எட்டு மனுக்கள்
(viii) கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி - ஆறு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ அநுர திசாநாயக்க
(ii) கௌரவ வாசுதேவ நாணாயக்கார
(iii) கௌரவ நலின் பண்டாற ஜயமஹ
(iv) கௌரவ எம்.எச்.எம். சல்மான்
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்
தோட்டத் தொழிலாளர்களுக்கு அண்மைய சம்பள உயர்வு கிடைக்கப்பெறாமை
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
முல்லைதீவு மாவட்டத்திலுள்ள ஒட்டுசுட்டானுக்கு பிரதேச செயலகத்தைப் பெற்றுக் கொடுத்தல்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ ரஊப் ஹகீம் அவர்கள், கடந்த இரண்டு நாட்களாக கொழும்பின் பல இடங்களிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நீர் வழங்கல் தடைப்பட்டமை தொடர்பாக சபையில் கூற்றினை முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை தேசிய ஆராய்ச்சி பேரவை சட்டமூலம்
சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“சர்வதேச நாணய நிதிய கடன் ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகள்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பந்துல குணவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1855 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜூலை 08ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks