E   |   සි   |  

2016 மே 17ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் குழுக்களுக்கு பிரதியிடப்பட்ட உறுப்பினர்களை தெரிவுக்குழு நியமித்துள்ளது-

‘A’  :  பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
‘B’  :  கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
‘C’  :  வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
‘D’  :  சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
‘E’  :  கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
‘F’  :  அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு
‘G’  :  அரசாங்கக் கணக்குக் குழு

‘H’  :  துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டங்களை இரத்துச் செய்தல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ்;

(i) இலங்கை, கொழும்பு பல்கலைக்கழகத்தினை தாபித்தல் சம்பந்தமாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மேல் உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 சனவரி 08 ஆம் திகதிய 1948/58 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப்பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(ii) இலங்கை, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தினை தாபித்தல் சம்பந்தமாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மேல் உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 பெப்புருவரி 19 ஆம் திகதிய 1954/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(iii) இலங்கை, பேராதனைப் பல்கலைக்கழகத்தினை தாபித்தல் சம்பந்தமாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மேல் உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 மார்ச்சு 29 ஆம் திகதிய 1960/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப்பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4) ஆம் பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்;

(iv) 2016 மார்ச்சு 29 ஆம் திகதிய 1960/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(v) 2016 மார்ச்சு 29 ஆம் திகதிய 1960/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை

(vi) 2015 ஆம் ஆண்டுக்கான அனர்த்த முகாமைத்துவ அமைச்சு
(vii) 2014 ஆம் ஆண்டுக்கான கலாசார அலுவல்கள் திணைக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(viii) 2015 ஆம் ஆண்டுக்கான  இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ ஜோன் அமரதுங்க                   
(ii) கௌரவ வாசுதேவ நாணாயக்கார   - 2 மனுக்கள்
(iii) கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன                   
(iv) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ  - 3 மனுக்கள்
(v) கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்

தொழில்நுட்ப பாடங்களுக்காக ஹோமாகம அறிவு சார் வலயத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள கல்வியியல் கல்லூரியின் கட்டுமானத்தில் முடக்கம்

(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

பலாலி விமானநிலையத்தை விரிவுபடுத்தல் சம்பந்தமானது


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

இலங்கையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி கலாசாரத்தையும் பொது நலத்தையும் வளர்க்கும் மற்றும் நிலைபெறச் செய்யும் நோக்கத்திற்காகவும் மற்றும் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு உதவவிருக்கும் ஆராய்ச்சி நிகழ்ச்சித் திட்டத்திற்கும் வசதியளிக்கும் நோக்கத்திற்காகவும் இலங்கை தேசிய ஆராய்ச்சி பேரவையென அழைக்கப்படவேண்டியதும் அறியப்பட வேண்டியதுமான பேரவை ஒன்றினைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்காக

“இலங்கை தேசிய ஆராய்ச்சி பேரவை”

எனும் சட்டமூலத்தினை கெளரவ விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


ஒத்திவைப்புப் பிரேரணை

“ஸ்ரீலங்கன் எயார்லைன் லிமிடெடின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்காலம்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ நலின் பண்டாற ஜயமஹ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2016 மே 18ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks