பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 104ஆ (5) (அ) ஆம் உறுப்புரையின் பிரகாரம் தோ்தல் ஆணைக்குழுவினால் 2016 பெப்புருவரி 25 ஆம் திகதிய 1955/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, மக்கள் தீர்ப்பொன்றுக்கான அல்லது தோ்தலொன்றுக்கான காலக்கெடுவின் போது அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் பின்பற்றியொழுக வேண்டிய ஒழுக்கநெறி அல்லது வழிகாட்டுநெறிக் கொள்கை
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் செயற்திறன் அறிக்கை
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் ஆண்டறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ நிமல் சிறிபால த சில்வா
(ii) கௌரவ நவின் திசாநாயக்க
(iii) கௌரவ துனேஷ் கன்கந்த
(iv) கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா - 4 மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“கல்வியியல் கல்லூரிக்கான தெரிவு” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1430 மணியளவில் பாராளுமன்றம் 2016 மே 17ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks