பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆம் ஆண்டுக்கான சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் நிர்வாக அறிக்கை
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை
(iii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டம் ஆகியவற்றின் மூலம் திருத்தப்பட்ட, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஏற்றுமதி இறக்குமதிக் கட்டடுப்பாட்டுச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் 3ஆவது உப பிரிவு மற்றும் 14 ஆவது பிரிவு என்பவற்றுடன் சோ்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு 2016.02.11 ஆம் திகதிய 1953/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iv) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டம் ஆகியவற்றின் மூலம் திருத்தப்பட்ட, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஏற்றுமதி இறக்குமதிக் கட்டடுப்பாட்டுச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் 3ஆவது உப பிரிவு மற்றும் 14 ஆவது பிரிவு என்பவற்றுடன் சோ்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு 2016.02.11 ஆம் திகதிய 1953/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ அப்துல் ஹலீம் - 2 மனுக்கள்
(ii) கௌரவ தயாசிறி ஜயசேகர
(iii) கௌரவ அசோக் அபேசிங்க - 2 மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) வேலையில்லாப் பட்டாதிரிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் எழுப்பிய வினாவுக்கு பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார அவர்கள் பதிலளித்தார்.
(ii) உலக சந்தையில் எண்ணெய் விலைகளில் பாரிய வீழ்ச்சியடைந்தும் இந்நாட்டு மக்களுக்கு நலன்கள் கிடைக்கப்பெறாமை தொடர்பாக கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் எழுப்பிய வினாவுக்கு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சந்திம வீரக்கொடி அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க, ஆட்களைப் பதிவு செய்தல் சட்டத்தைத் திருத்துவதற்காக
“ஆட்களைப் பதிவுசெய்தல் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வருமானவர் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ அப்துல்லா மஹரூப் அவர்களுக்கு “றிசாத் பதியுதீன் மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 14 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
(ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏழு கட்டளைகள்
(iii) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) முத்திரைக் கட்டணம் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(v) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் இரு தீர்மானங்கள்
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2016 மார்ச் 11ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks